Home

Monday, 19 August 2013

மீனவன்

ஒவ்வொரு துண்டு மீனை ருசிக்கும் போதும்!
இதை பிடித்த மீனவன் உயிரோடு இருக்கிறானா!
என சிந்திக்கிறேன்....!

எல்லை என்ற பெயரில் ராணுவ பயங்கரவாதம்....

-ஜெயா

Thursday, 15 August 2013

சுகந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்

சுகந்திர தினத்தன்றும் அடிமையானோம்.....
தொலைக்காட்சி பெட்டிக்குள்....!!!

-ஜெயா

Friday, 9 August 2013

விவசாயி

ஆற்றில் அனாமத்தாக இன்று போகும் தண்ணீர்!
இந்த நீரை சென்ற வருடம் என் வயலில் பாய்ச்சி இருந்தால்...
என் நிலம் கையை விட்டு போய் இருக்காதே என்று ஏங்கி நிற்கும்....
விவசாயின் கண்ணில் ரத்த கண்ணீர்!

-ஜெயா

Monday, 5 August 2013

நம்பிக்கை

அவள் கண்கள் என்னை சுண்டி இழுத்த பொழுது தெரியவில்லை....
அவள் அண்ணன் கை என் கண்ணத்தை பதம் பார்க்குமென்று!

அவள் அழகு என்னை வசீகரித்த பொழுது தெரியவில்லை....
அவள் அப்பன் ஆட்களை ஏவி என் முதுகில் டின் கட்டுவானென்று!

அவளிடம் காதலை சொன்ன அந்த நிமிடம் எனக்கு தெரியவில்லை....
அவள் என்னுடன் ஓடி வந்துவிடுவாள் என்று.....

அவள் அப்பனும் அண்ணனும் அவள் மீது வைத்த நம்பிக்கைக்கு தெரியவில்லை....
காதலின் முன் அது செத்து சுடுகாடு போய்விடும் என்று......

-ஜெயா

Saturday, 3 August 2013

முட்டாள் மூளை

இத்தனை நாள் இல்லாமல்
                   இன்று ஏனோ அவள் ஞாபகம்!
மறந்து விட்டதாய் நினைத்த மூளைக்கு
                   இதயத்தின் அறிவுரை!
முட்டாளே உன்னால் அவளை மறக்கமுடியாது...!

-ஜெயா

இரயில் பயணம்

நீங்காத உன் நினைவுகளுடன்!
நீயின்றி நித்தமும் தொடர்கிறதடி...
என் இரயில் பயணம்!

-ஜெயா

இதயத்தில் ஊசி

உன்னை மறக்க நினைத்த
                 ஒவ்வொரு நொடியும்!
உன் நினைவுகள் குத்தூசியாய் குதுத்தடி
                  என் இதயத்தில்!

-ஜெயா

குடிகாரன்

உன் மடியில் சாய்ந்து தூங்க நினைத்த என்னை!
தெருவில் கிடத்தினாயடி...
குடிகாரனாய்!

-ஜெயா

அனாதை

அவளின் வயிற்றை நிரப்பி இருந்தேன் பத்து மாதமாய்...
பாவி என் பசியை போக்க வலியில்லாதவளாய்...
வீசி எறிந்தால் வீதியிலே....
அனாதையாய்!

-ஜெயா

கார்த்திகை

ஒரு கோடி துண்டுகளாய் சிதறிப்போன சூரியன்...
சில்லென்ற இரவில் சிதரிகிடப்பது போல்...
மின்னுகிறது கார்த்திகை!

-ஜெயா

பிடிவாதக்காரி

என்னை பிடித்திருந்த போதும்!
பிடிக்காதது போல் நடித்திருந்தாயடி
பிடிவாதகாரியாய்!

-ஜெயா

சினுங்கள்

செல்லக் குழந்தையாய் நீ சினுங்கிய போது
                        சிக்கி கொண்டதடி என் மனம்!
சிக்கூசி தேடுகிறேன்
                       சிக்கெடுக்க!

-ஜெயா

அவள் நினைவுகள்

என்னை பிடிக்கவில்லை என்றாய்
                 இன்னும் நேசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்!
உன்னை அல்ல........
                  உன் நினைவுகளை!

-ஜெயா

தெரியவில்லையடி

கொக்கரிக்கும் சேவலுக்கு தெரியாது!
       காலையில் அது கொதிக்கபோவது குழம்பில் என்று!
மௌனமாய் முகம் காட்டும் நிலவுக்கு தெரியாது!
      விடியலுக்கு பின் அது இருக்குமிடம் தெரியாமல் போகும் என்று!
காலையில் சிரிக்கும் ரோஜாவிற்கு தெரியாது!
       மாலையில் அது சேரப்போகுமிடம் குப்பை தொட்டி என்று!
அது போல் எனக்கும் தெரியவில்லையடி!
        நீ என்னை மறந்து போவாய் என்று!

டிஸ்கோ

அடைமழையின் சத்தம்!
        இடி முழக்கத்துடன் மேளம்!
பல வண்ண மின்னகளில்
        ஒளிர்கிறது டிஸ்கோத்தே!

-ஜெயா

நினைவுகள்

நினைவில் இருந்து உன்னை
             நீக்கிவிட நினைத்தாலும்!
நிழலாய் என் நினைவுகளையே
             பின்தொடர்கிறாய்!

-ஜெயா

மறந்தேன்

மறந்து விட நினைத்தேன்!
               மறந்து விட்டேன்!
உன்னை பற்றிய நினைவுகளை அல்ல!
உன்னை பற்றிய கனவுகளை....!

-ஜெயா

ரோஜா முள்

ரோஜாவை ரசித்தேன்!
அதில் முள் இருப்பதையே மறந்தேன்!
குத்திவிட்டாயடி....
என் இதயத்தில்!

-ஜெயா

Friday, 2 August 2013

குழந்தையானேன்

குழந்தைகளுடன் விளையாடும் நேரத்தில்....
நாமும் குழந்தையாகிறோம்!
முட்டி வலி வரும் வரையில்.
-ஜெயா

கவிஞன்...

அவளை கண்ட அந்த நொடியில்...
தான் கண்டு கொண்டேன்!

எனக்குள் இத்தனை நாள் ஒளிந்திருந்த...
அந்த கவிஞனை!

-ஜெயா

தலைப்பு செய்தி.....

கண்ணே மணியே என கொஞ்சிய பிள்ளை...
இக்கரையில் காத்திருக்க....

அத்தானை காணாமல் அழுத கண்ணீரையும் துடைக்காமல்...
பூத்த விழி பூத்திருக்க....

அண்ணன் அள்ளி வருவான் நம் துயரம் துடைக்க வருவான்...
என தங்கையவள் எதிர்பார்த்து நிற்க...

வந்தது அன்றய தலைப்பு செய்தி......
துப்பாக்கி முனையில் மீனவர்கள் கைது....
முதலவர் பிரதமருக்கு கடிதமென்று......

-ஜெயா