இதை பிடித்த மீனவன் உயிரோடு இருக்கிறானா!
என சிந்திக்கிறேன்....!
எல்லை என்ற பெயரில் ராணுவ பயங்கரவாதம்....
-ஜெயா
கொக்கரிக்கும் சேவலுக்கு தெரியாது!
காலையில் அது கொதிக்கபோவது குழம்பில் என்று!
மௌனமாய் முகம் காட்டும் நிலவுக்கு தெரியாது!
விடியலுக்கு பின் அது இருக்குமிடம் தெரியாமல் போகும் என்று!
காலையில் சிரிக்கும் ரோஜாவிற்கு தெரியாது!
மாலையில் அது சேரப்போகுமிடம் குப்பை தொட்டி என்று!
அது போல் எனக்கும் தெரியவில்லையடி!
நீ என்னை மறந்து போவாய் என்று!
நினைவில் இருந்து உன்னை
நீக்கிவிட நினைத்தாலும்!
நிழலாய் என் நினைவுகளையே
பின்தொடர்கிறாய்!
-ஜெயா
மறந்து விட நினைத்தேன்!
மறந்து விட்டேன்!
உன்னை பற்றிய நினைவுகளை அல்ல!
உன்னை பற்றிய கனவுகளை....!
-ஜெயா
ரோஜாவை ரசித்தேன்!
அதில் முள் இருப்பதையே மறந்தேன்!
குத்திவிட்டாயடி....
என் இதயத்தில்!
-ஜெயா