Home

Thursday, 13 February 2014

காதலர்தினம் ஸ்பெஷல்

காதலியை தொலைத்தவனுக்கு கருப்புதினம்.....
தொலைந்தவளுக்கு காதலர் தினம்....
அவள் கனவனோடு...!

-ஜெயா

கற்பனை காதல்

காதலியே இல்லாதவனும் காதல் கவிதை எழுதலாம்....
அவன் கற்பனையில் ஒரு கன்னி இருந்தால்....
அவன் எப்பொழுதும் அவளை எண்ணி இருந்தால்....
கற்பனை காதல்....!

-ஜெயா

காதலர்தினம் ஸ்பெஷல்

செருப்பால் அடித்து மானத்தை வாங்கியவளையும்....
உருட்டுகட்டையால் அடித்து மண்டையை பிளந்தவனையும்....
மன்னித்து மனைவியாகவும் மச்சானாகவும் ஏற்க வைக்கும்....
காதல்....!

-ஜெயா

காதலர்தினம் ஸ்பெஷல்

முகப்புத்தகத்தில் முளைக்கும் காதல்...
முகம் பார்க்கும் முன்னமே..
மூன்று பேரை மாற்றிவிடும்....
போலிக்காதல்...!

-ஜெயா

காதலர்தினம் ஸ்பெஷல்

என் காதலை கடிதத்தில் எழுதிவைக்கவில்லை...
கனவில் தான் எழுதிவைத்தேன்....
கலைந்துபோய்விட்டது...!

-ஜெயா

பேஸ்புக் காதல்

கன்னிகளை மட்டும் காதலித்த காலம் போய்...
இன்று கணினிகளையும் காதலிக்க ஆரமித்துவிட்டோம்...
பேஸ்புக் காதலர்களாய்....!

-ஜெயா

Tuesday, 11 February 2014

காதலர்தினம் ஸ்பெஷல்

நான் காதலிக்க அவளில்லை.....
அவளை தவிர வேறு எவளையும் காதலிக்க மனமில்லை....
காத்திருக்கிறேன் அவளுக்காக அல்ல...
அவளைப்போல் என்னை வசியம் செய்ய தெரிந்தவளுக்காக...

-ஜெயா

Monday, 10 February 2014

காதலர்தினம் ஸ்பெஷல்

நீ என்னை காதலிக்க வேண்டும் என்று நினைக்கவில்லையடி....
உன்னை பார்த்தவுடன் நிறுத்திவிட்டேன் என் நெஞ்சத்தில்....
காதலியாய் அல்ல! மனைவியாய்!

-ஜெயா